கண்ணோட்டம்

அநுராதபுர மாவட்ட செயலகம்

மாவட்டத்தின் அமைவிடம் மற்றும் பௌதீகச் சூழல் பின்னணி

அநுராதபுர மாவட்டமானது வடக்கில் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களையும் தெற்கில் குருணாகல், மாத்ளை மாவட்டங்களையும் மேற்கில் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களினை கிழக்கில் பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. நிலப் பரப்பினடிப்படையில் விசாலமான நிர்வாக மாவட்டமான அநுராதபுரம் இலங்கையின் முழு நிலப் பரப்பில் 10.9% ஆகும். 717900 ஹெக்டயார் விசாலத்தையுடைய அநுராதபர மாவட்டத்தின் சனத்தொகை 856232 பேராகும். 7 தேர்தல் தொகுதிகளையும் 22 பிரதேச செயலகங்ளையும் 694 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் இம் மாவட்டம் உள்ளடக்கியுள்ளது.

அநுராதபுர மாவட்டச் செயலகமானது கிழக்கு நுவரகம பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அநுராதபுர நகர மத்தியில் அமைந்துள்ளது. 1835ஆம் ஆண்டில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய லுதினன் மென்கஸ்பில் தொடக்கம் இது வரை 71 அரசாங்க அதிபர்கள் சேவையாற்றியுள்ளனர். தற்போதைய  மாவட்டச் செயலாளராக/ அரசாங்க அதிபராக மஹிந்த செனவிரத்ன அவர்கள் மாவட்டத்தின் நிர்வாக நடவடிக்கைகளை செயற்படுத்தி வருகின்றார். ஜயசிரி மஹாபோதி அடங்களாக எட்டு புனித தளங்கள் மற்றும் மிஹிந்தலை ரஜ மஹா விகாரை, தந்திரிமலை ரஜ மஹா விகாரை, அவுக்கன சிலை உள்ளடங்களாக முக்கிய பெளத்த தளங்கள் பல இம் மாவட்டத்தினுல் அமையப் பெற்றுள்ளது. பண்டைய நீர்ப்பாசன முகாமைத்துவ கட்டமைப்பையுடைய கலாவாவி, திசா வாவி, நுவர வாவி, அபய வாவி, நாச்சாதீவுக் குளம் மற்றும் இராஜாங்கனைக் குளம் உட்பட பல குளங்கள் இம் மாவட்டத்தினுல் அமைந்துள்ளதோடு இவற்றினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் செழிப்படைகிறது.

மாவட்டத்தின் அனைத்து மக்களினதும் வாழ்க்கை தரத்தினை உயர்துவதன் பொருட்டு அரச கொள்கைகளுக்கு அமைவாக கடமையாற்ற சகல உத்தியோகத்தர்களுக்கும்  தலைமைத்துவத்தினை வழங்குதல் மாவட்ட செயலகத்தின் பொறுப்பு மற்றும் கடமையாகும்.


இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 01 ஜூன் 2015 04:49)